பொய்யான அறிக்கை வெளியிடும் எதிர்க்கட்சிகள்; செந்தில் பாலாஜி கிண்டல்
பொய்யான அறிக்கை வெளியிடும் எதிர்க்கட்சிகள்; செந்தில் பாலாஜி கிண்டல்
ADDED : டிச 08, 2024 10:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: 'தி.மு.க., மீது ஏதேனும் கூற வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகள் பொய்யான அறிக்கை வெளியிடுகின்றனர்' என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
கரூரில், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஜாமினில் வெளியே வந்த பா.ஜ.,வினர் பலர் அமைச்சர் பதவியில் உள்ளனர். மத்திய அரசு தேர்வு செய்து லண்டனுக்கு படிக்க அனுப்பிய 11 பேரில் அண்ணாமலையும் ஒருவர். ஆண்டுதோறும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் வெளிநாட்டிற்கு படிக்கச் செல்கின்றனர்.
மத்திய மின் அமைப்புடன் தான் தமிழகம் ஒப்பந்தம் போட்டதே தவிர தனியாருடன் அல்ல; அ.தி.மு.க., ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் படியே பணம் விடுவிக்கப்பட்டது. தி.மு.க., மீது ஏதேனும் கூற வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகள் பொய்யான அறிக்கை வெளியிடுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.