ADDED : டிச 06, 2024 07:46 PM
புயல், வெள்ள பாதிப்புக்கு விரைந்து நிவாரணம் மேற்கொள்ள வலியுறுத்தி, மத்திய நிதி, உள்துறை மற்றும் மின்துறை அமைச்சர்களையும், நீர்வளத்துறை இணை அமைச்சரையும் நேரில் சந்தித்து வலியுறுத்தி உள்ளேன்.
தமிழகத்தில் சோழன், கம்பன், பொதிகை உள்ளிட்ட தமிழ் பெயர்களில் ரயில்கள் இயக்கப்படுகிறது. தற்போது, வந்தே பாரத், தேஜஸ் ஆகிய மாற்றுமொழி பெயர் வைப்பதாக விமர்சிக்கின்றனர்.
தமிழ் பெயர்களில் இயக்கப்படும் ரயில்களின் பெயர்கள் மாற்றினால் எதிர்ப்பு தெரிவிக்கலாம். ஆனால், புதிதாக தேசிய அளவில் ரயில்களின் பெயர் சூட்டுவதை எதிர்க்க வேண்டிய அவசியம் கிடையாது. எதற்கெடுத்தாலும், மத்திய அரசை குறை சொல்வதை தவிர்த்து, ஆக்கப்பூர்வமான பிரச்னைகளை பேச வேண்டும். எதிர்கட்சிகளை ஏளனம் செய்யாமல், ஆட்சி பொறுப்பில் உள்ளவர்கள் பொறுப்பாக பதிலளிக்க வேண்டும்.
வாசன், தலைவர், த.மா.கா.,