கோவை, நீலகிரிக்கு 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; இன்று 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
கோவை, நீலகிரிக்கு 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; இன்று 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
ADDED : ஜூன் 09, 2025 02:03 PM

சென்னை: வரும் ஜூன் 13, 14, 15 ம் தேதிகளில் கோவை மலைப் பகுதிகள், நீலகிரி ஆகிய இரண்டு மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று (ஜூன் 09) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இன்று (ஜூன் 09) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* கிருஷ்ணகிரி
* தர்மபுரி
* திருப்பத்தூர்
* வேலூர்
* ராணிப்பேட்டை
* திருவண்ணாமலை
*விழுப்புரம்
* கள்ளக்குறிச்சி
* கடலூர்
* மயிலாடுதுறை
* அரியலூர்
நாளை (ஜூன் 10) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* ராணிப்பேட்டை
* வேலூர்
* திருவண்ணாமலை
* திருப்பத்தூர்
* கிருஷ்ணகிரி
* தர்மபுரி
* ஈரோடு
ஜூன் 13, 14, 15 ம் தேதி
மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்
* நீலகிரி
* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்
கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்
* திண்டுக்கல்
* தேனி
* தென்காசி
* கன்னியாகுமரி
* திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.