கோவை, நீலகிரிக்கு ஆரஞ்ச்; குமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு மஞ்சள்; இன்றைய மழை எச்சரிக்கை விபரம்
கோவை, நீலகிரிக்கு ஆரஞ்ச்; குமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு மஞ்சள்; இன்றைய மழை எச்சரிக்கை விபரம்
ADDED : ஜூன் 26, 2025 01:56 PM

சென்னை: கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்டை சென்னை வானிலை ஆய்வு மையம் பிறப்பித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் உள்ள மாவட்டங்களின் கனமழை பெய்து வருகிறது.
வரும் 30ம் தேதி வரையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களின் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று மாலை 4 மணி வரையில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை மற்றும் தேனியில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.