உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஜூலை 06, 2023 02:45 AM
அ நிறம் | அளவு
சென்னை:முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளான வரும், 15ம் தேதியை, அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட வேண்டும் என, பள்ளி கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:
முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளான வரும், 15ம் தேதி அனைத்து விதமான பள்ளிகளிலும், கல்வி வளர்ச்சி தின விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும்.
காமராஜரின் பணிகள் குறித்து பேச்சு, ஓவியம், கட்டுரை, கவிதைப் போட்டிகளை நடத்தி பரிசு வழங்க வேண்டும்.
இதற்கான செலவினங்களை பள்ளி வளர்ச்சி அல்லது ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி நிதியில் இருந்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
