தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ விபத்து இழப்பீடு பெறுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவு

 விபத்து இழப்பீடு பெறுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவு

 விபத்து இழப்பீடு பெறுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவு


ADDED : நவ 30, 2025 01:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 01:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: 'மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் இழப்பீடு பெறுவது குறித்து, பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' என, தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணையக் குழுவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மோட்டார் வாகன விபத்துகளில், மூன்று ஆண்டுகளுக்கு குறைவான தண்டனை விதிக்கக் கூடிய வழக்குகளை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி விசாரித்து வந்தார்.

வழக்கு ஒன்றில், அவர் பிறப்பித்த உத்தரவு:

வழக்கு விசாரணையின்போது, பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவரது உறவினர்களிடம், இழப்பீடு பெறப்பட்டதா என கேள்வி எழுப்பப்பட்டதாகவும், பெரும்பாலானோர் இழப்பீடு பெறுவது குறித்து, தங்களுக்கு தெரியாது என கூறியதும் அதிர்ச்சி அளிக்கிறது.

உரிய நபர்கள் இழப்பீடு பெறும் வகையில், வழக்கு தொடர்பான ஆவணங்களை, சட்டப் பணிகள் ஆணையக் குழுவிடம் வழங்கி, சட்ட உதவி பெற ஏற்பாடுகளை செய்யு மாறு, வழக்கின் விசாரணை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

அனைத்து மோட்டார் வாகன விபத்து வழக்குகளிலும், பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு பெறுவதில்லை என்பதால், இது தொடர்பாக பொது மக்களிடம் விழிப்புணர்வை, தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணையக் குழு ஏற்படுத்த வேண்டும்.

குறிப்பாக, ஊரக மற்றும் பின்தங்கிய மாவட்டங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நயினார் நாகேந்திரன் தமிழக பா.ஜ., தலைவர்



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us