தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ரேஷன் ஊழியர்களுக்கு சம்பள பட்டியல் வழங்க உத்தரவு

 ரேஷன் ஊழியர்களுக்கு சம்பள பட்டியல் வழங்க உத்தரவு

 ரேஷன் ஊழியர்களுக்கு சம்பள பட்டியல் வழங்க உத்தரவு


ADDED : மார் 10, 2026 02:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2026 02:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ரேஷன் கடை ஊழியர்களுக்கு மாத ஊதியத்தை வங்கி கணக்கு வாயிலாக வழங்குவதுடன், ஊதிய பிடித்தம் விபரங்களை, சம்பளப் பட்டியலாக வழங்குமாறு, கூட்டுறவு சங்கங்களின் அதிகாரிகளுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், 35,000 ரேஷன் கடைகளை, கூட்டுறவு சங்கங்கள் நடத்துகின்றன; அவை, பல்பொருள் அங்காடி, காய்கறி, மருந்தகம் போன்றவற்றையும் நடத்துகின்றன.

அவற்றில் விற்பனையாகாத பொருட்களை வாங்கி கொள்ளும்படி, ரேஷன் ஊழியர்களை, அதிகாரிகள் கட்டாயப்படுத்தி விற்பதுடன், மாத ஊதியத்தில் 1,000 ரூபாய், 2,000 ரூபாய் என இஷ்டத்திற்கு பிடித்தம் செய்வதாகவும், ரேஷன் ஊழியர்கள் புகார்கள் எழுப்புகின்றனர்.

மேலும், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், ஊழியர்களுக்கு ரொக்கமாக ஊதியம் வழங்கப்படுகிறது.

இதையடுத்து, 'ரேஷன் ஊழியர்களுக்கு மாத இறுதி வேலை நாளிலோ அல்லது அடுத்த மாத முதல் வேலை நாளிலோ, வங்கி கணக்கு வாயிலாக சம்பளம் வழங்குவதுடன், ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் விபரங்களை சம்பளப் பட்டியலாக வழங்க வேண்டும்' என, கூட்டுறவு சங்கங்களின் அதிகாரிகளுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us