ADDED : செப் 09, 2025 05:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : தமிழக சர்க்கரை துறை அதிகாரிகளுடன், அந்த துறையின் அமைச்சர் ராஜேந்திரன் நேற்று ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:
கரும்புக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக, ஒரு டன்னுக்கு 349 ரூபாய், விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இதன் வாயிலாக, 14 கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு, 18.8 லட்சம் டன் கரும்பு வழங்கிய, 26,629 விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு 65.6 கோடி ரூபாய் ஊக்கத்தொகை, ஆகஸ்ட் 31ம் தேதி முன்பே, வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது.
தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் பணியை, இம்மாதம் 30ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.
புதிய அறுவடை பருவத்தில், அதிக சர்க்கரை உற்பத்தி செய்ய வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.