தேர்தல் நேரத்தில் மருத்துவ சேவை தடையின்றி வழங்க உத்தரவு
தேர்தல் நேரத்தில் மருத்துவ சேவை தடையின்றி வழங்க உத்தரவு
ADDED : மார் 17, 2024 04:04 AM
சென்னை : தேர்தல் நேரத்தில் குறைபாடுகள் இல்லாமல், பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில், தொடர்ந்து மருத்துவ சேவை அளிக்க வேண்டும் என, மக்கள் நல்வாழ்வு துறைஉத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்., 19ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் துவங்கி உள்ளன.
பிரசாரங்கள், பொதுக்கூட்டங்கள் உள்ளிட்டவற்றில் அரசியல் கட்சியினர் ஈடுபட உள்ளனர்.
இந்நிலையில், தேர்தல் பணிகளால் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல், தொடர்ந்து மருத்துவ சேவை அளிக்க வேண்டும் என, மக்கள் நல்வாழ்வு துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, உத்தரவில் கூறியிருப்பதாவது:
தேர்தல் நேரத்தில் எவ்வித குறைபாடுகளும் இல்லாமல், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் வாயிலாக, பொதுமக்களுக்கு, 24 மணி நேரமும் அத்தியாவசிய மருத்துவ சேவைகள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
பொதுமக்களுக்கு மருத்துவ சேவை வழங்குவதில் மெத்தனம் காட்டக்கூடாது.
மாநிலம் முழுதும்கோடைகால வெப்பம் அதிகரித்து வருகிறது. இந்நேரங்களில், மக்களுக்கு அளிக்க வேண்டிய சிகிச்சை மற்றும் விழிப்புணர்வுகள் குறித்து ஏற்கனவே வழிகாட்டுதல் வழங்கப்பட்டு உள்ளன.
அவற்றை பின்பற்றி, தொடர்ந்து மருத்துவ சேவை அளிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

