ADDED : பிப் 25, 2024 12:44 AM
சென்னை:தமிழக ரேஷன் கடைகளில், 'ஊட்டி டீ' துாள் விற்கப்படுகிறது. 100 கிராம் டீ துாள் விலை, 25 ரூபாய்; ஏலக்காய் டீ துாள் விலை, 30 ரூபாயாக உள்ளது. அவை, தமிழக அரசின், 'இண்ட்கோசர்வ்' எனப்படும், சிறு விவசாயிகள் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளின் இணையத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்படுன்றன.
ரேஷனில் கட்டுப்பாடற்ற பிரிவின் கீழ் விற்கப்படும், ஊட்டி டீ துாளை, கார்டுதாரர்கள் மட்டுமின்றி, யார் வேண்டுமானாலும் தேவைக்கு ஏற்ப வாங்கலாம்.
ஒரு கடைக்கு மாதம், 300 டீ துாள் பாக்கெட்டுகளை விற்பனைக்கு அனுப்பினால், 50 சதவீதத்திற்கு குறைவாகவே விற்பனையாகின்றன. ரேஷன் கடை பொது வினியோக திட்டம் தொடர்பான ஆய்வு கூட்டத்தை, கூட்டுறவு துறை உயரதிகாரிகள்நடத்தினர்.
அதில், ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் ஊட்டி டீ துாள் பாக்கெட்டுகளை முழுதுமாக விற்க நடவடிக்கை எடுக்குமாறு மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.