3.50 லட்சம் மீட்டர்கள் வாங்க 6 நிறுவனங்களுக்கு ஆணை
3.50 லட்சம் மீட்டர்கள் வாங்க 6 நிறுவனங்களுக்கு ஆணை
ADDED : டிச 13, 2024 01:44 AM

சென்னை:தமிழகத்தில் வீடுகளுக்கு, 'சிங்கிள் பேஸ்' எனப்படும் ஒரு முனை; 'த்ரீ பேஸ்' எனப்படும் மும்முனை மின் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. அதற்கு ஏற்ப, தனித்தனி மீட்டர்களை மின் வாரியம் பொருத்துகிறது. இந்த ஆண்டின் மத்தியில், மீட்டர்கள் தட்டுப்பாட்டால், புதிய மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
எனவே, ஒரு முனைப் பிரிவில், 12 லட்சம் மீட்டர்கள் வாங்க, ஆறு நிறுவனங்களுக்கு இரு மாதங்களுக்கு முன் ஆணை வழங்கப்பட்டது. அதில், 4 லட்சம் மீட்டர்கள் வினியோகம் செய்யப்பட்ட நிலையில், அவை விண்ணப்பதாரர்களின் இடங்களில் பொருத்தப்பட்டு வருகின்றன. கடந்த மாத நிலவரப்படி, மும்முனை பிரிவில், 60,000 மீட்டர்கள் இருந்தன.
தற்போது, மும்முனை பிரிவில், 3.50 லட்சம் மீட்டர்கள் வாங்க, ஆறு நிறுவனங்களுக்கு மின் வாரியம் ஆணை வழங்கியுள்ளது. இந்நிறுவனங்கள் இரு வாரங்களில் மீட்டர் வினியோகத்தை செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

