'லோக்சபா தேர்தலில் வெளிமாநில தொழிலாளர் ஓட்டுபோட ஏற்பாடு'
'லோக்சபா தேர்தலில் வெளிமாநில தொழிலாளர் ஓட்டுபோட ஏற்பாடு'
ADDED : மார் 01, 2024 12:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்:தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (நெக்) நாமக்கல் மண்டல தலைவர் சிங்கராஜ் வெளியிட்ட அறிக்கை:
வரும் லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் ஓட்டுப்போடுவதற்கு, தமிழக அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது. நாமக்கல் பகுதி கோழிப்பண்ணை மற்றும் தீவன ஆலைகளில், ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.
அவர்கள், தங்களது ஓட்டுகளை பதிவு செய்ய, நாமக்கல் கலெக்டர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
எனவே கோழிப்பண்ணையாளர் அனைவரும், தங்கள் பண்ணை மற்றும் தீவன ஆலைகளில் பணிபுரியும் வெளிமாநில பணியாளர்களின், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு நகல்களை, மாவட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளரின், 88380 40453 என்ற மொபைல் எண்ணுக்கு'வாட்ஸாப்' மூலம் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

