ஒரு தரப்பு மட்டுமே ஆள்வதற்கு மற்றவர்கள் பிறக்கவில்லை
ஒரு தரப்பு மட்டுமே ஆள்வதற்கு மற்றவர்கள் பிறக்கவில்லை
ADDED : நவ 20, 2024 07:29 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வலதுசாரி, இடதுசாரி என பேச கூடியவர்கள் கூட ஆணவ படுகொலையை பற்றி பேச மறுப்பது, இந்த சமூகத்தின் துர்பாக்கியம். கோவிலில் எல்லோரும் சமம் என்று செல்லும்போது, தலித் மக்கள் மட்டும் தடுத்து நிறுத்தப்படுவது ஏன். அப்படியென்றால், அங்கு தீண்டாமை இருப்பதாகத்தானே அர்த்தம்?
தலித் மக்கள் கோபத்தை சொல்லும்போது, வன்முறையாளர்களாக சித்தரிக்கப்படுகின்றனர். அதேபோல, உரிமையை கேட்டால் 'சங்கி' என்கின்றனர். இனி, சேரிகளுக்கு என பட்ஜெட்டில் தனி ஒதுக்கீடு வேண்டும்.
பிரச்னை வர வேண்டும் என எதிர்பார்க்கிறோம். பிரச்னை வந்தால் தான் தீர்வு கிடைக்கும். அமைதியாக இருந்தது போதும்.
இந்த நாட்டில் ஒரு தரப்பு மட்டுமே ஆள்வதற்காக, மற்றவர்கள் பிறக்கவில்லை. வி.சி.,க்கள் தலைவர் திருமாவளவனுடைய கனவுகள் விரைவில் நிறைவேறும்.
ஆதவ் அர்ஜுனா, துணைப் பொதுச்செயலர், வி.சி.,

