உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : மார் 02, 2024 12:52 AM
அ நிறம் | அளவு
சென்னை:அ.தி.மு.க.,வில் தேர்தல் அறிக்கை தயார் செய்ய, துணைப் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான விஸ்வநாதன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு, மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து, சென்னையில் 512, வேலுார் 773, விழுப்புரம் 492, சேலம் 604, தஞ்சாவூர் 687, திருச்சி 475, திருநெல்வேலி 643, மதுரை 1,678, கோவை 707 என, மொத்தம் 6,571 மனுக்களை பெற்றுள்ளது.
அதில் இடம் பெற்றுள்ள கோரிக்கைகளை தொகுத்து, தேர்தல் அறிக்கை தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. சென்னையில் நேற்று, தேர்தல் அறிக்கை குழு ஆலோசனை கூட்டம் நடந்தது. பின், குழுவின் தலைவர் விஸ்வநாதன் அளித்த பேட்டி:
அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை, தேர்தலில் பேசுபொருளாக, 'சுப்ரீம் ஹீரோ'வாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
