ADDED : ஆக 14, 2025 03:19 AM
சென்னை:'தமிழகத்தில் நெல் கொள்முதல் சீசன், செப்., 1 முதல் துவங்கும்' என, உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்து உள்ளார்.
அவரது அறிக்கை:
கடந்த, 2021 - 22 நெல் கொள்முதல் சீசனில், அதிகபட்சமாக 43.27 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. அதன்பின், கடந்த 2024 செப்., 1ல் துவங்கி, இம்மாதம் முடிய உள்ள நடப்பு சீசனில், இதுவரை இல்லாத அளவுக்கு, 46.50 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அடுத்த சீசன், செப்., 1 முதல் துவங்க உள்ளது.
இந்த சீசனில், நெல் வழங்கும் விவசாயிகளு க் கு, முதல்வர் ஸ்டாலின், தமிழக அரசின் ஊக்கத் தொகையாக, 100 கிலோ எடை உடைய, குவின் டால் சன்னரக நெல்லுக்கு 156 ரூபாய், பொது ரகத்திற்கு 131 ரூபாய் உயர்த்தி அறிவித்துள்ளார்.
எனவே, வரும் சீசனில், குவின்டால் சன்னரக நெல்லுக்கு, 2,545 ரூபாய், பொது ரக நெல்லுக்கு, 2,500 ரூபாய், குறைந்தபட்ச ஆதரவு விலையாக வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.