படியளக்கும் பரமசிவம் :நாளை (ஜன.11, 2026) - மார்கழி அஷ்டமி சப்பரம்
படியளக்கும் பரமசிவம் :நாளை (ஜன.11, 2026) - மார்கழி அஷ்டமி சப்பரம்
ADDED : ஜன 10, 2026 04:39 AM

மதுரை மீனாட்சியம்மன் சொக்கநாதர் மார்கழி தேய்பிறை அஷ்டமியான இன்று எல்லா உயிர்களுக்கும் படியளப்பதற்காக சப்பரத்தில் எழுந்தருள்கின்றனர். சொக்கநாதர் பிரியாவிடையுடனும், அம்மன் தனியாகவும் கயிலாய வாத்தியத்துடன் வருவதும், அம்மனின் சப்பரத்தை பெண்களே இழுப்பதும் சிறப்பு.
சிவபெருமானிடம் ஒருமுறை பார்வதி, ' சுவாமி... எல்லா உயிர்களுக்கும் படியளந்ததாக சொல்கிறீர்களே...இதோ நான் வைத்திருக்கும் செப்புக்குள் உள்ள எறும்புக்கு படியளந்தீர்களா... எனப் பார்க்கிறேன்' எனக் கேட்டாள். 'அந்த செப்பை நீயே பார்' என பதிலளித்தார் சிவன். அந்த எறும்பும் வாயினில் ஒரு அரிசியைக் கவ்வி நிற்பதைக் கண்டு மகிழ்ந்தாள். இதனடிப்படையில் இந்த திருவிழா மதுரையில் நடக்கிறது.
இதில் பிரசாதமாக தரும் அரிசியை வீட்டிற்கு எடுத்து வந்தால் உணவுக்கு குறைவு வராது.
இந்நாளில் சிவன் கோயிலை வலம் வந்தால் துன்பம் எல்லாம் தீரும். அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். எறும்பு, பறவைகளுக்கு உணவு கொடுத்தால் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் சேரும். இந்த நல்ல நாளில் பசியில்லாத உலகம் அமைய மீனாட்சி சொக்கநாதரை வேண்டுவோம்.

