sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பா.ஜ., சார்பில் நாளை கவன ஈர்ப்பு போராட்டம்; நயினார் நாகேந்திரன் அறிவிப்பு

/

பா.ஜ., சார்பில் நாளை கவன ஈர்ப்பு போராட்டம்; நயினார் நாகேந்திரன் அறிவிப்பு

பா.ஜ., சார்பில் நாளை கவன ஈர்ப்பு போராட்டம்; நயினார் நாகேந்திரன் அறிவிப்பு

பா.ஜ., சார்பில் நாளை கவன ஈர்ப்பு போராட்டம்; நயினார் நாகேந்திரன் அறிவிப்பு

5


ADDED : மே 04, 2025 07:25 PM

Google News

ADDED : மே 04, 2025 07:25 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை கண்டித்து, பா.ஜ., சார்பில் நாளை கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை;

கடந்த ஏப்ரல் 22ம் தேதியன்று. காஷ்மீர் மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற மக்களை மதத்தின் பெயரால் பயங்கரவாதிகள் படுகொலை செய்த கொடூரம் உலக நாடுகளையே உலுக்கியுள்ளது.

சமாதானத்தையும், அமைதியையும் நாடும் நாட்டைக் கொலைக்களமாக மாற்றும் நோக்கத்தோடு பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் பாகிஸ்தானோடு அரசாங்க ரீதியான உறவுகளை முற்று முழுதாக முறித்துக் கொண்டு வருகிறோம்.

மேலும், காஷ்மீர் பகுதியின் அமைதியைக் கெடுக்க சதி திட்டங்கள் தீட்டும் குழுக்களை உள்நாட்டிலேயும், எல்லை தாண்டியும் கண்டறிந்து அவர்கள் மீது சமரசமில்லாத முறையில் நடவடிக்கைகள் எடுக்க மத்திய அரசு தீவிரமாக செயலாற்றி வருகிறது.

நாடு முழுக்க சட்ட விரோதமாக குடியேறியுள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்து சட்டவிரோத குடியேறிகளே இந்தியாவிற்குள் நடக்கும் பல அசம்பாவிதங்களுக்குக் காரணம் எனவும், ஒரு அசாதாரண சூழ்நிலையில் நாட்டை சேதப்படுத்தும் நோக்கத்துடன் தான் அவர்கள் இங்கு குடியேறியுள்ளார்கள் எனவும் வலுவாக சந்தேகிக்கும் சூழ்நிலையும் தற்போது தலை தூக்கியுள்ளது.

பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால். வடகிழக்கு மாநிலங்களை வங்கதேசம் கைப்பற்றவேண்டும் என வங்கதேச ராணுவ ரைபிள்ஸ் படையின் முன்னாள் தலைவராக இருந்து ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஏ.எல்.எம். பஸ்லூர் ரஹ்மான் இந்தியாவிற்கு எதிராகக் கூறியுள்ள கருத்து சந்தேகத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த நேரத்தில் 24 ஆண்டுகளாக திருப்பூரில் வாழ்ந்து வந்து, ஒரு தமிழகப் பெண்ணையும் திருமணம் செய்து கொண்ட சயான் என்ற வங்கதேசத்துக் குடியேறியை இரண்டு நாட்களுக்கு முன்பு காவல்துறை கைது செய்த போதும். ஏப்ரல் 29ம் தேதியன்று டில்லி காவல்துறை சென்னையில் சட்ட விரோதமாக வாழும் 33 வங்கதேசத்து குடியேறிகளை கைது செய்த போதும் தமிழகமே பேரதிர்ச்சியடைந்தது.

ஆனால், தமிழகத்தில் ராணுவத்தை சந்தேகித்தும், நாட்டின் பாதுகாப்பு விஷயங்களில் சர்ச்சைகள் எழுப்பும் விதமாகவும் சிலர் அவதூறுகளைப் பரப்ப முயல்வதை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

தி.மு.க., அரசை விமர்சனம் செய்தால் உடனே கைது. தங்கள் உரிமைகளுக்காக போராடுபவர்கள் மீது பொய் வழக்கு, பா.ஜ.,வினர் உட்பட எதிர்க்கட்சிகள் மீது காவல்துறையை ஏவி அச்சுறுத்தல் என சர்வாதிகார போக்கைக் கையாளும் தி.மு.க., ஆட்சியில்தான் தேச இறையாண்மைக்கு விரோதமாகவும், ராணுவத்தை அவமதிக்கும் விதமாகவும் பதிவிடுபவர்கள் சுதந்திரமாக உலவுகிறார்கள்.

தி.மு.க., அரசே அவர்களை சீராட்டி வளர்ப்பது போல் உள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்தும், பாகிஸ்தான். வங்கதேசத்தைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளை தொடர்ந்து அடையாளம் கண்டு வெளியேற்றுவதிலும் தமிழக அரசு மும்முரமாக செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும், ராணுவத்தின் மீதும் தேச பாதுகாப்பின் மீதும் ஆதாரமற்ற விஷ வதந்திகளைக் கிளப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மே 5ம் தேதியன்று கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






      Dinamalar
      Follow us