தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ வைர வேலுடன் பழனி சென்ற நகரத்தார் காவடி குழுவினர்

வைர வேலுடன் பழனி சென்ற நகரத்தார் காவடி குழுவினர்

வைர வேலுடன் பழனி சென்ற நகரத்தார் காவடி குழுவினர்


ADDED : பிப் 08, 2025 06:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2025 06:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நத்தம்: திண்டுக்கல் மாவட்டம், பழனிக்கு பாதயாத்திரையாக செல்லும் சிவகங்கை மாவட்ட நகரத்தார் காவடி குழுவினர் வைரவேலுடன் நேற்று நத்தத்தை கடந்து சென்றனர். அவர்களுக்கு வழி நெடுகிலும் அன்னதானம் வழங்கி மக்கள் வரவேற்றனர்.

பழனி தைப்பூசத்தையொட்டி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, தேவகோட்டை, கானாடுகாத்தான், கண்டனுார் நாட்டுக்கோட்டை நகரத்தார் கள் பல ஆண்டு களாக பாரம்பரியத்துடன் காவடிகள் எடுத்து பாதயாத்திரையாக சென்று வருகின்றனர். இந்தாண்டு பிப்., 2ல் தேவகோட்டையில் புறப்பட்ட இக்குழுவினர் நேற்று காலை நத்தம் மாரியம்மன் கோவில் அருகிலுள்ள வாணியர் பஜனை மடத்தை வந்தடைந்தனர்.

அங்கு தரிசனம் செய்த பின்னர் பழனி புறப்பட்டனர். வழக்கமாக கொண்டு வரும் வைர வேலையும் கொண்டு சென்றனர். பல்வேறு அமைப்பினர் இக்குழுவினருக்கு அன்னதானம் வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us