ADDED : மார் 17, 2026 02:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தே.மு.தி.க, உட்பட 23 கட்சிகளுடன், தி.மு.க., மெகா கூட்டணி அமைத்துள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜயின் த.வெ.க., வந்தால் வெற்றி எளிதாகும் என்பதால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார். ஆனால், குறைந்தது 160 தொகுதியில் போட்டியிடுவது என்பதில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பிடிவாதமாக இருப்பதால், த.வெ.க., இணைவது சிக்கலாகியுள்ளது.
மறுபக்கம் கூட்டணி குறித்து யாரும் வெளியில் பேசக்கூடாது என, அமித் ஷா கண்டிப்புடன் கூறியும், 'டீயும், காபியும் ஒன்றாக கலக்க முடியாது' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியதும், மேலிடத்தை கோபமடையச் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

