ADDED : செப் 18, 2025 02:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, கடந்த ஐந்தாண்டுகளாக எங்கே சென்றார். சட்டசபை தேர்தல் வருவதால், மக்களை சந்தித்து வருகிறார். அதை செய்வேன், இதை செய்வேன் எனவும் சொல்கிறார். டில்லியில், துணை ஜனாதிபதியை சந்திப்பதாக கூறிவிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பழனிசாமி சந்தித்து பேசியதற்கு என்ன நெருக்கடி என அவருக்கு மட்டுமே தெரியும்.
சந்திப்பு பற்றி, அவரிடம் தான் கேட்க வேண்டும். அ.தி.மு.க.,வுக்கு நான் தான் பொதுச்செயலர் என்கிறார். ஆனால், குறுக்கு வழியில் பொதுச்செயலர் ஆனவர் பழனிசாமி. அ.தி.மு.க., கட்சி விதிக்கு முரணாக ஒரு சில பொதுக்குழு உறுப்பினர்களை விலைக்கு வாங்கி பொதுச்செயலரானார்; ஜனநாயக முறைப்படி அவரை தேர்ந்தெடுக்கவில்லை. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து அடுத்த மாதம் முதல்வர் ஸ்டாலின் நல்ல முடிவு எடுப்பார். - பெரியசாமி, தமிழக அமைச்சர், தி.மு.க.,