ADDED : ஜூன் 14, 2025 03:16 AM
சென்னை : தமிழக வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் அறிக்கை:
நான் ஒரு விவசாயி என்ற எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியின், பழைய பம்மாத்துகள் கலைந்து நிற்பதால், அதை நிலைநிறுத்த, அவர் போடும் கோமாளி வேடங்கள் எடுபடவே இல்லை.
ஈரோடு மாவட்டத்தில், அரசு வேளாண் கண்காட்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், விவசாயிகள் நலனுக்காக, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதை, பட்டியல் போட்டார்.
அதை பொறுக்க முடியாமல், பொறுமிக் கொண்டு முதல்வரை விமர்சித்து அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி.
நான்தான் உண்மையான விவசாயி என சொல்லி, மக்களை ஏமாற்றும் போலி விவசாயி, பழனிசாமியின் முகத்திரையை, முதல்வர் ஸ்டாலின் ஈரோடில் வைத்து கிழித்துவிட்டார்.
அந்த ஆதங்கத்தில் தான் வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொள்கிறார்.
அதேநேரம், விவசாயிகள் வயிற்றில் அடிப்பதுதான் பழனிசாமி பாணி. விவசாயிகளை வஞ்சிக்கும் மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தபோது, அதை ஆதரித்தவர் பழனிசாமி.
அந்த பழனிசாமிதான் இன்றைக்கு, விவசாயிகளின் காப்பாளன் என கபட வேடம் போடுகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.