அதிகரிக்கும் 'என்கவுன்டர்' அரசுக்கு பழனிசாமி கண்டனம்
அதிகரிக்கும் 'என்கவுன்டர்' அரசுக்கு பழனிசாமி கண்டனம்
ADDED : செப் 27, 2024 02:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிக்கை: காஞ்சிபுரத்தில், சில தினங்களுக்கு முன், ஓய்வுபெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்ட நிகழ்வில் கைதானவர்கள் மீது, காவல் துறையினர் விசாரணை என்ற பெயரில், கொடூர தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வந்துள்ளன.
தவறு செய்ததாக குற்றம் சாட்டப்படும் எவரையும் கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி, தண்டனை பெற்றுத்தர வேண்டும். காவல் துறையே நீதி பரிபாலனத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு, தண்டனை வழங்குவது ஏற்புடையதல்ல.
குற்றம் சாட்டப்பட்டவர்களை கண்மூடித்தனமாக தாக்குவது; குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களை தாக்கியதாகக் கூறி என்கவுன்டர் செய்வது, தி.மு.க., ஆட்சியில் அதிகரித்து வருவது கண்டனத்துக்கு உரியது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

