ADDED : டிச 23, 2024 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சத்தீவை இலங்கை அரசுக்கு, தி.மு.க., தாரை வார்க்கவில்லை. தாரை வார்த்ததை கண்டித்து, அப்போதைய அமைச்சர் ஓ.பி.ராமனும், நானும், 1974ல் விழுப்புரத்தில் நடந்த கண்டன கூட்டத்தில் பேசினோம்.
தி.மு.க., தாரை வார்த்தது என, திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்கின்றனர். அம்பேத்கரை விமர்சித்த அமித் ஷாவை கண்டித்து, அ.தி.மு.க., தீர்மானம் நிறைவேற்றவில்லை.
தி.மு.க., செயற்குழுவில், மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். மத்திய அரசை எதிர்க்க வேண்டிய இடத்தில் எதிர்க்கிறோம்.
தி.மு.க., செயற்குழுவில், 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தி.மு.க., கூட்டணி வெற்றி பெறுவதற்கான வியூகம் குறித்து பேசினோம்.
- ஆர்.எஸ்.பாரதி
தி.மு.க., அமைப்பு செயலர்

