முதல்வர் பணியைப் பார்த்து பழனிசாமிக்கு தேர்தல் ஜுரம்
முதல்வர் பணியைப் பார்த்து பழனிசாமிக்கு தேர்தல் ஜுரம்
ADDED : அக் 26, 2024 07:16 PM
கடந்த 10 ஆண்டுகளில் இடைப்பாடி தொகுதிக்கு அமைச்சராகவும், முதல்வராகவும் இருந்த பழனிசாமி தொகுதி மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை. அதனால் தான், அங்குள்ள மக்கள், குறைகளை சுட்டிக்காட்டி எங்களிடம் மனு அளிக்க குவிந்தனர். அவருடைய தொகுதியில் மட்டும், 3,000 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
தன்னுடைய இயலாமையை மறைக்க, தி.மு.க., அரசு மீதும் அமைச்சர்கள் மீது குற்றம் சுமத்துகிறார் பழனிசாமி. அவர் பேசுவது குறித்தெல்லாம் யாரும் சட்டை செய்வதில்லை.
சேலத்தில் உள்ள ஒவ்வொரு ஊராட்சி, டவுன் பஞ்.,களில் மக்களை சந்தித்து, குறைகள் களைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்வர், துணை முதல்வர், மக்களை சந்தித்து அவர்களது குறைகளை நிவர்த்தி செய்து வருகின்றனர். அதன் பலன் முழுதும் தி.மு.க.,வுக்கு போய்விடும் என்று அஞ்சும் பழனிசாமிக்கு, இப்போதே, தேர்தல் ஜூரம் வந்துவிட்டது. அதனால் அவர் உளறுவதை கண்டுகொள்ளாமல், நாங்கள் எங்கள் வேலையை பார்க்கிறோம்.
ராஜேந்திரன், சுற்றுலாத்துறை அமைச்சர்