சுயநலத்துக்காக கட்சியை அடமானம் வைத்தவர் பழனிசாமி: செந்தில்பாலாஜி
சுயநலத்துக்காக கட்சியை அடமானம் வைத்தவர் பழனிசாமி: செந்தில்பாலாஜி
UPDATED : ஜன 22, 2025 08:21 PM
ADDED : ஜன 22, 2025 07:05 PM
சென்னை:'எல்லாவற்றையும் எந்த ஒரு அறமும் இன்றி, வெறும் வியாபாரமாகவே பார்ப்பவர், அ.தி.மு.க., பொதச்செயலர் பழனிசாமி' என, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தரையே தேயும் அளவுக்கு ஊர்ந்து சென்று, காலை பிடித்து முதல்வராகி, பதவி சுகம் கண்டவுடன், அந்த கால்களையே வாரிவிட்ட பழனிசாமி, அரசியல் விசுவாசம் பற்றி வகுப்பெடுக்கிறார்.
பழனிசாமி தனிப்பட்ட வகையில், எத்தனை பேருக்கு துரோகம் செய்தார் என்ற கணக்கைக்கூட விட்டு விடலாம். தன் பதவி நிலைத்திருக்க வேண்டும் என்ற சுயநலத்திற்காக, தமிழகத்தையே பா.ஜ.,விடம் அடமானம் வைத்தார் என்பதை, தமிழக மக்கள் அனைவரும் அறிவர்.
புளி மூட்டையில் துவங்கி அரசியல் வரை, எல்லாவற்றையும் எந்த ஒரு அறமும் இன்றி, வெறும் வியாபாரமாகவே பார்க்கும் பழனிசாமி, எப்படிப்பட்ட அரசியல் வியாபாரி என்பது, அவரை சுற்றியுள்ளவர்களுக்கு மிக நன்றாக தெரியும்.
அடிமை கூட்டத்திற்கு லாவணி பாடாதவர்களுக்கு எல்லாம் ஏதாவதொரு முத்திரை குத்தி, அவர்களை காலி செய்வதற்காக, எந்த ஒரு 'லாபி'யும் செய்ய தயங்காத பதவி வியாபாரி பழனிசாமி, மற்றவர்களை பார்த்து வியாபாரி என்று சொல்வது நகை முரண்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நம்பிக்கை என்பதற்கான இலக்கணம் தெரியாதவர் செந்தில் பாலாஜி
நரம்பில்லாத நாக்கு நாகரிகம் இல்லாமல் பேசினால் செந்தில் பாலாஜி கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.
நம்பிக்கை
என்பதற்கான இலக்கணமே தெரியாதவர் செந்தில் பாலாஜி. அ.தி.மு.க.,வில்
இருந்தபோது தி.மு.க.,வை பற்றி எவ்வளவு அவதுாறாக பேசினார். 'கொள்ளைக்
கூடாரம் கருணாநிதி குடும்பம்' என செந்தில் பாலாஜி சொன்னாரா, இல்லையா.
முதல்வர் ஸ்டாலின் கரூரில் செந்தில் பாலாஜியை எப்படி பேசினார் என்பது
எல்லாருக்கும் தெரியும்.
பழனிசாமியை கொச்சைப்படுத்தி பேசுகிறார்.
மல்லாக்க படுத்துக் கொண்டு எச்சில் துப்பினால், துப்புகிறவர் முகத்தில்
தான் படும். அரசியலில் செந்தில்பாலாஜி மோசமானவர். அவர் போல் அல்ல பழனிசாமி;
அரசியல் இலக்கணத்தை மாற்றியவர்.
உதயகுமார், முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,

