sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 அ.தி.மு.க., - ஐ.டி., அணியினருடன் பழனிசாமி ஆலோசனை

/

 அ.தி.மு.க., - ஐ.டி., அணியினருடன் பழனிசாமி ஆலோசனை

 அ.தி.மு.க., - ஐ.டி., அணியினருடன் பழனிசாமி ஆலோசனை

 அ.தி.மு.க., - ஐ.டி., அணியினருடன் பழனிசாமி ஆலோசனை


ADDED : டிச 27, 2025 07:31 AM

Google News

ADDED : டிச 27, 2025 07:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அ.தி.மு.க., - ஐ.டி., அணியின் சமூக வலைதள செயல்பாடுகள் குறித்து நிர்வாகிகளுடன், அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

சென்னையில் உள்ள பழனிசாமி இல்லத்தில் நடந்த கூட்டத்தில், ஐ.டி., அணி செயலர் ராஜ் சத்யன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம், வாட்ஸாப், யு -டியூப் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களிலும், அ.தி.மு.க., - ஐ.டி., அணி செயல்பாடு, சட்டசபை தேர்தலையொட்டி செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடந்தது.

'சட்டசபை தேர்தல் வருவதால், தி.மு.க.,வின் பொய் பிரசாரத்தை உடனுக்குடன் முறியடிக்க வேண்டும். தி.மு.க., அரசின் தவறுகளை, சட்டம் -- ஒழுங்கு சீர்கேட்டை, ஊழல், முறைகேடுகளை, மக்கள் மனதில் எளிதில் பதியும் வகையில், கார்ட்டூன்களாக, ரீல்ஸ்களாக, துணுக்கு செய்திகளாக மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்' என, பழனிசாமி அறிவுரை வழங்கினார்.

கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில் நடந்த ஐ.டி., அணி மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், ஐ.டி., அணி தலை வராக இருக்கும் கோவை சத்யன் பங்கேற்கவில்லை என்பது குறிப் பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us