ADDED : நவ 30, 2024 07:08 PM
சென்னை:'மழை நீர் வடிகால் பணிகள் என, தி.மு.க., ஆட்சியாளர்கள் எடுத்த 'போட்டோ ஷூட்' வெற்று விளம்பரங்கள்தான் என்பதை, சென்னை சாலைகள் அம்பலப்படுத்தி உள்ளன' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
'பெஞ்சல்' புயல் காரணமாக, சென்னையில் கன மழை பெய்து வருகிறது. மக்கள் அனைவரும், சென்னை வானிலை ஆய்வு மையம் அளிக்கும் தகவல்கள் அடிப்படையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
மழை நீர் வடிகால் பணிகள் என்று, தி.மு.க., ஆட்சியாளர்கள் எடுத்த, 'போட்டோ ஹூட்'கள் வெற்று விளம்பரங்கள்தான் என்பதை, இன்றைய சென்னை சாலைகள் அம்பலப்படுத்தி உள்ளன.
இனி இவர்களை நம்பி, எந்தப் பயனும் இல்லை. எனது அறிவுறுத்தலின்படி, அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி சார்பில், 'ரேபிட் ரெஸ்பான்ஸ் டீம்' அமைக்கப்பட்டுள்ளது.
சென்ன மக்கள், இந்த கடுமையான தருணத்தில், தங்களுக்கு தேவையான உதவிகளை, அ.தி.மு.க., தன்னார்வலர்களை எந்நேரமும் தொடர்புகொண்டு பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

