sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பழனிசாமி, சசிகலாவை விசாரிப்பது அவசியம் கோடநாடு வழக்கில் நீதிபதி உத்தரவு முழு விபரம்

/

பழனிசாமி, சசிகலாவை விசாரிப்பது அவசியம் கோடநாடு வழக்கில் நீதிபதி உத்தரவு முழு விபரம்

பழனிசாமி, சசிகலாவை விசாரிப்பது அவசியம் கோடநாடு வழக்கில் நீதிபதி உத்தரவு முழு விபரம்

பழனிசாமி, சசிகலாவை விசாரிப்பது அவசியம் கோடநாடு வழக்கில் நீதிபதி உத்தரவு முழு விபரம்


ADDED : டிச 07, 2024 07:17 PM

Google News

ADDED : டிச 07, 2024 07:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'கோடநாடு எஸ்டேட்டில் நடந்த குற்ற சம்பவத்துக்கு பின், பல அசம்பாவிதங்கள் நிகழ்ந்துள்ளன. உண்மை நிலவரத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வர, மனுதாரர்கள் தரப்பில், சாட்சிகள் விசாரணை கோரப்பட்டதை நிராகரிக்க முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை மற்றும் கொள்ளை வழக்கில், எதிர்தரப்பு சாட்சிகளாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, சசிகலாவை விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் அனுமதி அளித்து உத்தரவிட்டது. அந்த உத்தரவின் முழு விபரம்:

குற்றவியல் நடைமுறை சட்டப்படி, தங்கள் தரப்பு சாட்சி, ஆதாரங்களை சமர்ப்பிக்க, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உரிமை உள்ளது. முதல்வராக பழனிசாமி பதவி வகித்ததால், அவரை விசாரிக்க கோர முடியாது என, நீலகிரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால், தற்போது பழனிசாமி முதல்வராக இல்லை. வழக்கு தொடர்பான உண்மைகளை வெளிக்கொண்டு வர, அவரை சாட்சியாக விசாரிக்க வேண்டும் என, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் எடுத்துரைத்த காரணங்களில் நியாயம் உள்ளது.

கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் நடந்த ஐந்து நாட்களில், குற்றம் சாட்டப்பட்ட முக்கிய நபர் கனகராஜ், சேலத்தில் சாலை விபத்தில் பலியானார். குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு நபர் சயான், கேரளாவில் நடந்த விபத்தில் சிக்கி, மனைவி, மகளை இழந்துள்ளார்.

இரு மாதங்களுக்கு பின், கோடநாடு எஸ்டேட்டில் பணிபுரிந்த உதவியாளர் தினேஷ்குமார், தன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கோடநாடு கொள்ளை, கொலை சம்பவத்தை அடுத்து நடந்த அசம்பாவிதங்கள், பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளதால், பழனிசாமி உள்ளிட்டோரை விசாரிக்க வேண்டும் என, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் தரப்பில் கேட்பது நியாயம்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, கோடநாடு எஸ்டேட் வரும் போது, அமைச்சர் என்ற முறையில் பழனிசாமி அங்கு சென்றிருப்பார். கோடநாடு பங்களா குறித்து, அவருக்கு தெரிந்திருக்கும் என, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் முன்வைக்கும் காரணங்கள் ஏற்புடையவை. நீதியின் நலன், நியாயமான விசாரணை கருதி, குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் கோரிக்கையை நிராகரிக்க முடியாது. அவர்களுக்கு வாய்ப்பு வழங்க மறுப்பது சட்ட விதிகளுக்கு எதிரானது.

சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை விசாரிப்பது தேவையற்றது என்று கூற முடியாது. ஜெயலலிதா, கோடநாடு எஸ்டேட் செல்லும் போது, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சங்கர், ஐ.பி.எஸ்., அதிகாரி முரளி ரம்பா ஆகியோரும் உடன் இருந்திருப்பர்.

சம்பவம் நடந்த போது, எஸ்டேட்டுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணங்களை கண்டறிய வேண்டும். அதனால், இவர்களை விசாரிக்க வேண்டும். கட்சியின் நிர்வாகிகள் சஜீவன், சுனில் ஆகியோரும் ஜெயலலிதா வரும் போது, அங்கு இருந்திருப்பர் என்பதால், அவர்களையும் விசாரிக்க வேண்டும்.

அரசு தரப்பு சாட்சிகள் விசாரணை முடிந்த பின், பழனிசாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன், ஐ.ஏ.எஸ்., அதிகாரி சங்கர், ஐ.பி.எஸ்., அதிகாரி முரளி ரம்பா, அ.தி.மு.க., நிர்வாகிகள் சஜீவன், சுனில் ஆகியோரையும் விசாரிக்க, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அவகாசம் வழங்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us