ADDED : ஆக 04, 2025 04:47 AM
சென்னை: அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி அறிக்கை:
'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற உயரிய லட்சியத்துடன், கோவையில் கடந்த மாதம் 7ம் தேதி, எழுச்சி பயணத்தை துவக்கினேன்.
எழுச்சி பயணத்திற்கு செல்லும் இடமெல்லாம், மக்கள் அளித்து வரும் பேராதரவிலும் , அவர்களின் அளவற்ற அன்பிலும் மிகுந்த மகிழ்ச்சியுற்றேன்.
எனக்கு அளித்த வரவேற்புக்கு, தி.மு.க., ஆட்சியை அகற்றிவிட்டு, தமிழக மக்களாகிய உங்களுக்கு நல்லாட்சியை வழங்குவதே, நான் தெரிவிக்கும் நன்றிக்கு நிகரானது.
கடன் வாங்குவதில், இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்கியது தான், இந்த 'பெயிலர் மாடல்' ஸ்டாலின் அரசின் சாதனை.
மக்களின் தேவைகளை ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து செய்யும், அ.தி.மு.க.,வின் நல்லாட்சி அமையும். தமிழக மக்கள் வாழ்வு உயரும். அதுவரை நான் ஓயப்போவதில்லை. பெயிலியர் மாடல் ஸ்டாலின் அரசை வீழ்த்துவோம்; 'பை பை' ஸ்டாலின்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.