ADDED : ஜூன் 28, 2025 02:20 AM

சென்னை : அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, வரும் ஜூலை 7ம் தேதி முதல் தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறார். முதல் கட்டமாக, 12 நாட்களில், 34 சட்டசபை தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இது தொடர்பாக, அ.தி.மு.க., நேற்று வெளியிட்ட அறிக்கை:
அ.தி.மு.க.. பொதுச்செயலர் பழனிசாமி, 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு, வரும் ஜூலை 7 முதல் 21ம் தேதி வரை. சட்டசபை தொகுதி வாரியாக தொடர் சூறாவளி பயணம் மேற்கொள்கிறார்.
ஜூலை 7ல் கோவை, மேட்டுப்பாளையம் தொகுதியில், பிரசார பயணத்தை துவங்குகிறார். அன்று கவுண்டம்பாளையம் தொகுதியிலும் பேசுகிறார். ஜூலை 8ல், கோவை வடக்கு, கோவை தெற்கு, 10ல் விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம்; 11ல் வானுார், மயிலம், செஞ்சி; 12ல் கடலுார், பண்ருட்டி, நெய்வேலி; 14ல் குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம்; 15ல் சீர்காழி, பூம்புகார், மயிலாடுதுறையில் பிரசாரம் செய்கிறார்.
ஜூலை 16ல் நன்னிலம், திருவாரூர், கீழ்வேளூர்; 17ல் நாகை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி; 18ல் மன்னார்குடி, திருவிடைமருதுார், கும்பகோணம்; 19ல் பாபநாசம், தஞ்சை, திருவையாறு; 21ல் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய தொகுதிகளில் பழனிசாமி பிரசாரம் செய்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.