ADDED : ஏப் 18, 2025 07:44 PM

பத்தாம் வகுப்பு முடித்த மாணவ - மாணவிகள், பள்ளிப் படிப்பை முடித்ததும், தி.மு.க., ஆதரவாளர்களாக மாறி, கட்சியின் மாணவரணியில் இணைந்துள்ளனர். இப்படி பல லட்சம் பேர், கட்சியின் உறுப்பினர்களாக இணைந்து வருகின்றனர். நான் முதல்வன் மற்றும் தமிழ் புதல்வன் திட்டங்கள் மாணவ-மாணவிகளுக்கு பயனுள்ள வகையில் உள்ளன.
அ.தி.மு.க. - பா.ஜ., கூட்டணியால், சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பும் இருக்காது என யார் சொன்னாலும், அது காதில் பூ சுற்றும் வேலைதான். பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன் என்பது போல நடந்து கொண்டு, சிறுபான்மையினரை ஏமாற்ற பழனிசாமி திட்டம் போட்டுள்ளார். அது நடக்காது. சிறுபான்மையினர், பழனிசாமியை இந்த விஷயத்தில் நம்ப மாட்டார்கள்.
அ.தி.மு.க., - பா.ஜ.,வுடன் கூட்டணி என்றதும், அ.தி.மு.க,வை சேர்ந்த 50 ஆண்டு கால இஸ்லாமிய உறுப்பினர் ஒருவர், மிகுந்த மனவேதனையோடு கட்சியில் இருந்து வெளியேறியுள்ளார்.
மகேஷ், தமிழக அமைச்சர்

