ADDED : ஆக 03, 2025 02:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பா.ஜ., மதவாத கட்சி இல்லை என்று அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, திடீர் ஞானோதயம் வந்து கூறுகிறார். சில மாதங்களுக்கு முன், மதவாத கட்சியாக இருந்த பா.ஜ., இன்று புனிதமாகி விட்டது. இப்படி மாற்றி மாற்றி பேசுவதில், பழனிசாமிக்கு பரிசே கொடுக்கலாம். கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக, பா.ஜ., மதவாத கட்சி இல்லை என பழனிசாமி கூறுவது பச்சைப்பொய்.
யாருடைய அரசியல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று போகப்போக தெரியுமே தவிர, ஜோசியம் கூற முடியாது. ஆனால், தி.மு.க., தலைவர் அரசியலில் ஸ்டெடியாக சென்று கொண்டிருக்கிறார். வரும் 2026 தேர்தலில், தமிழகத்தில் தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வரும்.
- ரகுபதி, தமிழக அமைச்சர், தி.மு.க.,