ADDED : அக் 10, 2025 02:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒவ்வொரு மாவட்டத்திலும் வேகமான வளர்ச்சி பணிகளை, முதல்வர் ஸ்டாலின் முன்னெடுத்து வருகிறார். காஞ்சிபுரம் மாவட்டத்தில், தொழில்கள் துவங்குவதற்கான அனுமதி வழங்குவதில், மாவட்ட நிர்வாகத்தில் சுணக்கம் ஏற்படுவதாக தெரிகிறது. இதனால் தி.மு.க., அரசுக்கு தான் கெட்டப்பெயர். அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி கூட்டத்தில் த.வெ.க., கொடியுடன் சிலர் பங்கேற்றதாகவும், அதனால், கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளதாகவும், பழனிசாமி கூறி இருக்கிறார். பழனிசாமி காண்பது பகல் கனவு; அது பலிக்காது. காங்., கூட்டத்திலும் கூட, த.வெ.க., கொடி பறக்கத்தான் செய்கிறது. அதற்காக, நாங்களும் கூட்டணி கனவு காண முடியுமா?
-செல்வப்பெருந்தகை
தலைவர், தமிழக காங்.,