ADDED : அக் 10, 2025 02:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், உள்ள 42,000-த்திற்கும் மேற்பட்ட கோவில்களில், பெரும்பாலானவற்றின் அருகிலும், தேர் ஊர்வலம் நடைபெறும் ரத வீதிகளிலும் இறைச்சி கடைகளும், பிரியாணி கடைகளும் அதிகரித்து வருகின்றன. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் அருவெறுப்பு அடைகின்றனர்.
கோவிலுக்கு செல்லும் வழியில் பிரியாணி, இறைச்சி கடை நடத்துவோர், பெருவாரியாக வேற்று மதத்தினராகவே உள்ளனர். உ.பி., டில்லி, போன்ற மாநிலங்களில் கோவில் உள்ள சாலைகளில் இறைச்சி, பிரியாணி கடைகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை வகுத்துள்ளனர். அதுபோல, தமிழகத்திலும் கோவில் அருகிலும், ரத வீதிகளிலும் இறைச்சி மற்றும் பிரியாணி கடைகள் வைக்க தடை செய்து தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.
-காடேஸ்வரா சுப்ரமணியம் மாநில தலைவர், ஹிந்து முன்னணி