ADDED : ஜூன் 07, 2025 04:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், தொகுதி மறுசீரமைப்பை நடத்தி, தமிழகத்தில் லோக்சபா இடங்களைக் குறைப்பதுதான் பா.ஜ.,வின் சதித் திட்டம். இந்தச் சதியை முறியடிக்க நடவடிக்கை எடுப்பவர் நம் முதல்வர்.
இப்படி தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக எதையும் செய்யாத பழனிசாமி, 'அமித் ஷாவிடம் பேசினேன்; மத்திய அரசிடம் குரல் கொடுத்தேன்' என, கலர் கலராக 'ரீல்' விடுகிறார். ஹிந்தி திணிப்பு, தொகுதி மறுசீரமைப்பு எனத் தமிழகத்தை ஆதிக்கம் செய்யும் பா.ஜ., வோடு கூட்டணி வைத்து விட்டு, அதை எதிர்ப்பேன் என்கிறார் பழனிசாமி; இதுதான் உலக மகா உருட்டு.
-ரகுபதி
தமிழக அமைச்சர்