'ஓரிரு வாரத்தில் பாம்பன் பாலம் திறப்பு ' * ரயில்வே பொது மேலாளர் பேட்டி
'ஓரிரு வாரத்தில் பாம்பன் பாலம் திறப்பு ' * ரயில்வே பொது மேலாளர் பேட்டி
ADDED : நவ 30, 2024 12:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை:“பாம்பன் பாலம் ஓரிரு வாரத்திற்குள் திறக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்படும்,” என, தெற்கு ரயில்வே பொதுமேலாளர், ஆர்.என்.சிங் கூறினார்.
சிவகங்கையில், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் கூறியதாவது:
பாம்பன் ரயில் பாலம் குறித்து, மக்களுக்கு எவ்வித சந்தேகமும் வேண்டாம். ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏற்கனவே அனுமதி அளித்து விட்டார். ஓரிரு வாரத்திற்குள் பாம்பன் பாலம் வழியாக ரயில்கள் இயக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
உடன், மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவத்ஸவா, கோட்ட மேலாளர் பிரசன்னா உட்பட அதிகாரிகள் இருந்தனர்.

