ADDED : ஜன 27, 2025 03:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரம்பலுார்: பெரம்பலுார் மாவட்டம், நொச்சிக்குளம் பஞ்., செயலர் பானுமதி, 50. இவர், பஞ்., நிதியை கையாடல் செய்ததாக தெரிகிறது.
குடியரசு தினத்தையொட்டி நேற்று நடந்த சிறப்பு கிராமசபை கூட்டத்தில், நிதி கையாடல் குறித்து பொதுமக்கள், பானுமதியிடம் விளக்கம் கேட்டதுடன், பஞ்., அலுவலகத்தை பூட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆலத்துார் பி.டி.ஓ., சேகர் மக்களிடம் பேச்சு நடத்தினார். விசாரணையில், ஊராட்சி நிதி, 1 லட்சம் ரூபாய்க்கு, பானுமதி கையாடல் செய்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, பானுமதியை சஸ்பெண்ட் செய்து பி.டி.ஓ., நேற்று உத்தரவிட்டார்.

