ADDED : பிப் 16, 2025 11:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: மத்திய அரசின் ஊராட்சிகளின் அதிகாரப் பகிர்வு குறியீடு அறிக்கையில், ஒட்டுமொத்த அறிக்கையில், தமிழகம் 3வது இடத்தையும், செயல்பாடுகள் குறியீட்டில் முதலிடத்தையும் பிடித்து உள்ளது.
மத்திய அரசு, கடந்த 13ம் தேதி, ' மாநிலங்களில் ஊராட்சிகளின் அதிகாரப் பகிர்வின் நிலை- சான்றுகள் அடிப்படையிலான தரவரிசையை வெளியிட்டது. இந்த தரவரிசைப் பட்டியலானது
1. கட்டமைப்பு
2. செயல்பாடுகள்
3. நிதி
4. பிரதிநிதிகள்
5. திறன்மேம்பாடு
6. பொறுப்புடைமை ஆகியன அடிப்படையில் தயாரிக்கப்பட்டது.
ஒட்டுமொத்த குறியீட்டின்படி மாநிலங்களின் தரவரிசைப் பட்டியலில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஊராட்சிகளின் கடமை மற்றும் பொறுப்புகளை செயல்படுத்தும் விதத்திலும், அதிகாரப் பகிர்வு அளித்த திட்டங்களை நடைமுறைப்படுத்தும் விதத்திலும் முதலிடத்தில் உள்ளது.

