தன்மான உணர்வுள்ள திருமா அ.தி.மு.க.,வுடன் வர வேண்டும் அழைக்கிறார் பாண்டியராஜன்
தன்மான உணர்வுள்ள திருமா அ.தி.மு.க.,வுடன் வர வேண்டும் அழைக்கிறார் பாண்டியராஜன்
ADDED : ஜூன் 23, 2025 04:06 AM

விருதுநகர்: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் கூறியதாவது:
முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா, எல்லா கோவில்களுக்கும் சென்று வழிபாட்டில் ஈடுபடுகிறார். முதல்வருக்கு மதத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றால் எந்த மதத்திற்கும் ஆதரவாக இருக்கக்கூடாது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தை அரசு முறையாக கையாண்டு இருந்தால் பிரச்னை பெரிதாக வளர்ந்திருக்காது. மதநல்லிணக்கம் இருந்த இடத்தில் பிரச்னையை வளரவிட்டு, இரு சமுதாயத்திற்கு இடையே பகை உணர்வு உருவாக தி.மு.க., தான் காரணம்.
பழனியில் முருகன் மாநாடு அரசியல் நிகழ்வாக நடத்தப்பட்டது. ஆனால் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு அப்படி நடக்கவில்லை.
வி.சி.,க்கள் தலைவர் திருமாவளவன், அ.தி.மு.க., குறித்து இதுவரை நல்ல கருத்துக்களையே தெரிவித்துள்ளார். தன்மான உணர்வு உள்ள திருமாவளவன் போன்றோர் அ.தி.மு.க,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

