பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
ADDED : மார் 19, 2024 06:34 AM

பழநி : பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா திருஆவினன்குடி கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று காலை 9:02 மணிக்கு வேதமந்திரங்கள், பக்தர்களில் 'அரோகரா' கோஷத்துடன் கொடியேற்றம் நடந்தது.
கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, சித்தநாதன் சிவனேசன், கந்த விலாஸ் செல்வகுமார், கண்பத் கிராண்ட் ஹரிஹர முத்தய்யர், சரவண பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து முருகன் கோயிலில் உச்சிக்கால பூஜை க்கு பின் காப்பு கட்டுதல் நடந்தது.
மார்ச் 27 வரை தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு, ஆறாம் நாளான மார்ச் 23 மாலை திருக்கல்யாணம் நடக்கிறது.
பங்குனி உத்திர தினமான மார்ச் 24ல் மாலை திருத்தேரோட்டம் , மார்ச் 27 இரவு கொடி இறக்குதலுடன் தங்க குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் ஈரோடு மாவட்டம் கொடுமுடியிலிருந்து பக்தர்கள் புனித நீர் தீர்த்தக்காவடி எடுத்தபடி வருவர்.
இதற்காக பழநி மற்றும் பல்வேறு பகுதியிலிருந்தும் பக்தர்கள் செல்வது குறிப்பிடத்தக்கது.

