ADDED : ஆக 02, 2025 07:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : பா.ஜ., கூட்டணியிலிருந்து விலகுவதாக, நேற்று முன்தினம் பன்னீர்செல்வம் அறிவித்தார்.
நேற்று முன்தினம் காலை, அடையாறு தியோசோபிகல் சொசைட்டி வளாகத்தில் நடைபயிற்சி மேற்கொண்ட, முதல்வர் ஸ்டாலினை, பன்னீர்செல்வம் சந்தித்தார். ஆழ்வார்பேட்டை இல்லத்திற்கு மாலை சென்று, ஸ்டாலினை சந்தித்து 40 நிமிடங்கள் பேசினார்.
நேற்று காலை, நடை பயிற்சி சென்ற முதல்வர் ஸ்டாலினை, மீண்டும் பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். இரண்டு நாட்களில், மூன்றாம் முறையாக இருவரும் சந்தித்துள்ளது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

