பன்னீர் ஆதரவு 'மாஜி'க்கள் தி.மு.க.,வில் ஐக்கியம்
பன்னீர் ஆதரவு 'மாஜி'க்கள் தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : ஜன 09, 2026 02:01 AM

சென்னை: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்களாக இருந்த அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சுப்புரத்தினம், பாலகங்காதரன் ஆகியோர், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நேற்று தி.மு.க.,வில் இணைந்தனர்.
தி.மு.க.,வில் இணைந்த பின், சுப்புரத்தினம், பாலகங்காதரன் ஆகியோர் அளித்த பேட்டி:
கடந்த ஏழு ஆண்டுகளாக, அ.தி.மு.க.,வில் நடப்பது எதுவும் ஆரோக்கியமாக இல்லை. அதனாலேயே தி.மு.க.,வில் இணைந்துள்ளோம்.
அண்ணாதுரையின் லட்சியங்களை முதல்வர் ஸ்டாலினால் தான் நிறைவேற்ற முடியும். நாங்கள் மூன்று முதல்வர்களை பார்த்து விட்டோம். ஆனால், முதல்வர் ஸ்டாலினை போல யாரும் இல்லை. அ.தி.மு.க., தன் தனித்தன்மையை இழந்து பா.ஜ.,வுக்கு அடிமையாகி விட்டது.
இவ்வாறு கூறினர்.
தி.மு.க.,வில் இணைந்த சுப்புரத்தினம், பாலகங்காதரன் இருவரும் அ.தி.மு.க.,வில் தொடர்ந்து இயங்கி வந்தனர். பின்னர், பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களாக இருந்தனர்.

