தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ எங்கள் கூட்டணிக்கு பன்னீர் வருவார்

 எங்கள் கூட்டணிக்கு பன்னீர் வருவார்

 எங்கள் கூட்டணிக்கு பன்னீர் வருவார்


ADDED : ஜன 28, 2026 08:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 28, 2026 08:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடந்த 2021 சட்டசபை தேர்தலில் எதிர்க்கட்சிகள் சிதறி கிடந்ததால், தி.மு.க., எளிதாக வென்றது, இப்போது, எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து விட்டோம். அதனால், தி.மு.க., வெற்றி பெற முடியாது.
முதல்வர் ஸ்டாலினுக்கு இப்போதே தோல்வி பயம் ஏற்பட்டு விட்டது. அதனால்தான், 'அமித் ஷாவால் உருவான கூட்டணி' என, ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார்.
அ.தி.மு.க., கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் தினசரி ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருக்கிறோம். அனைவரும் ஒருங்கிணைந்து தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
எங்கள் கூட்டணியில் மேலும் கட்சிகள் இணையும். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் அ.தி.மு.க., கூட்டணிக்கு வருவார். அவரிடமும் பேசிக் கொண்டிருக்கிறோம்.
தமிழகத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில் 217 பெண் குழந்தைகள் கொலை செய்யப்பட்டுள்ளனர்; அவர்களில் ஏழு பேர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு உள்ளனர்.
- அன்புமணி, தலைவர், பா.ம.க.,


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us