ADDED : மார் 25, 2024 06:25 PM

சென்னை: பா.ஜ., கூட்டணியில் சுயேட்சையாக போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனக்கு வாளி, பலா பழம், திராட்சை சின்னங்களுள் ஒன்றை ஒதுக்குமாறு தேர்தல் கமிஷனிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இடம்பெற்றுள்ளார். தாங்கள் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என அறிவித்த பன்னீர்செல்வம், அதிமுக.,வின் இரட்டை இலை சின்னம், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்த நிரந்தர தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம். இதனையடுத்து அவருக்கு ஒரே ஒரு தொகுதியை மட்டும் வழங்கியது பா.ஜ.,
ராமநாதபுரம் தொகுதியில் தானே வேட்பாளராக களமிறங்கும் பன்னீர்செல்வம், சுயேட்சை சின்னத்தில் நிற்பதாகவும் அறிவித்தார். இந்த நிலையில் தனக்கு வாளி, பலா பழம், திராட்சை சின்னங்களுள் ஒன்றை ஒதுக்குமாறு தேர்தல் கமிஷனிடம் பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார்.
இவற்றில் ஒன்றை பன்னீர்செல்வத்துக்கு தேர்தல் கமிஷன் ஒதுக்கும். அதில் திராட்சை கிடைத்தால் பிரசாரத்திற்கு எளிதாக இருக்கும் என பன்னீர்செல்வம் தரப்பு நம்புகிறது.

