ADDED : செப் 29, 2024 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை:
சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டை, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், மயிலாப்பூர், அடையாறு, வேளச்சேரி உட்பட பல பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும், கடந்த மூன்று நாட்களாக அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது.
இதனால், பொதுமக்களின் இயல்பான வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மின் வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டால், 'மின்மாற்றிகள் சரியில்லை. மின் சாதனங்கள் பழுதடைந்துள்ளன' என்கின்றனர். இது ஏற்புடையதல்ல.
மின்சாரத்தில் இருந்து வரும் வருமானம் கணிசமாக உயர்ந்த நிலையில், முறையான மின் கட்டமைப்பை தி.மு.க., அரசு ஏற்படுத்தாதது கண்டனத்துக்கு உரியது. இது, தி.மு.க., அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.