ஐ.என்.டி.யு.சி., மாநில தலைவராக பன்னீர்செல்வம் தேர்வு
ஐ.என்.டி.யு.சி., மாநில தலைவராக பன்னீர்செல்வம் தேர்வு
ADDED : நவ 17, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழக ஐ.என்.டி.யு.சி., தலைவராக பன்னீர்செல்வமும், பொருளாளராக வாழப்பாடி ராம.கர்ணனும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
காங்கிரஸ் தொழிற்சங்க மான ஐ.என்.டி.யு.சி., தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்தல், திருப்போரூர் திருமண மண்டபத்தில் நேற்று, தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் விஷ்ணு பிரசாத், ஓய்வுபெற்ற வருவாய் துறை அலுவலர் சோமசுந்தரம் ஆகியோர் மேற்பார்வையில் நடந்தது.
தேர்தலில், 1,740 பேர் ஓட்டளித்தனர். தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பன்னீர்செல்வம், 1,394 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். பொதுச்செயலர் பதவிக்கு கோவை செல்வம், பொருளாளர் பதவிக்கு வாழப்பாடி ராம.கர்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும், துணைத் தலைவர்கள், செயலர்களும் தேர்வு செய்யப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களாக, 30 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

