ADDED : ஜன 09, 2026 02:08 AM

சென்னை: சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், தனிக்கட்சி துவங்குவது தொடர்பாக, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன், நேற்று ஆலோசனை நடத்தினார்.
தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பான அறி விப்பு, விரைவில் வெளியாக உள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டணி கணக்குகளை துவங்கி விட்டன. அ.தி.மு.க., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், பா.ம.க. இணைந்துள்ளது. முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்தை, கூ ட்டணிக்குள் கொண்டு வர, பா.ஜ., முயற்சித்தது.
ஆனால், கட்சியிலோ, கூட்டணியிலோ, பன்னீர்செல்வத்தை சேர்க்க மாட்டோம் என, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்து விட்டார்.
அதைத் தொடர்ந்து, பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன், சென்னை நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலில், நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அடுத்தகட்ட நடவடிக்கை, தனிக்கட்சி அமைப்பது, யாருடன் கூட்டணி அமைப்பது என, ஆலோசித்ததாக, தகவல் வெளியானது. மேலும் இன்றும் ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பன்னீர்செல்வத்திடம் தேர்தல் நிலைப்பாடு குறித்து, செய்தியாளர்கள் கேட்டதற்கு, ''தை பிறந்தால் வழி பிறக்கும், பொறுமையாக இருங்கள்,'' என்றார்.

