ADDED : ஜூலை 03, 2026 12:43 AM
சென்னை: சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில், துணை மருத்துவ படிப்பில், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, கூடுதலாக கல்வி கட்டணம் வசூலிக்கப் படுவதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான, ஆண்டு கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க, உயர் நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜ் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இக்குழு, கல்வி கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. அதன்படி, டிப்ளமா படிப்புகளில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 20,000 முதல் 35,000; நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 40,000 முதல் 75,000 ரூபாய் வரை, ஆண்டு கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இளங்கலை படிப்புகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு, 50,000 முதல் 60,000; நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, ஒரு லட்சம் முதல் 1.20 லட்சம்; முதுநிலை துணை மருத்துவ படிப்புகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு, 75,000; நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 1.25 லட்சம் ரூபாய் வரை, நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
