தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது; பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது; பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது; பக்தர்கள் தரிசனம்


ADDED : நவ 24, 2026 05:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 24, 2026 05:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

​திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், இந்தாண்டு கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் 15ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தீபதிருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று (24ம் தேதி) அதிகாலை 4 மணிக்கு, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், ஆகிய பஞ்ச பூதங்கள், சிவபெருமான் ஒருவனே என்பதை விளக்கும் வகையில், சுவாமி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என பக்தி கோஷத்துடன் தரிசனம் செய்தனர்.



​'அனேகன், ஏகன்' என்பதை விளக்கும் வகையில் இன்று மாலை, 6:00 மணிக்கு, 2,668, அடி உயர மலை உச்சியில், மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. விழாவையொட்டி சுவாமி சன்னதி முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கோவில் வளாகம் முழுவதும், வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது. பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us