ADDED : ஜூலை 01, 2026 05:28 AM

சென்னை: தமிழக உயர்கல்வித்துறையின் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கீழ், ஆறு அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகள், இரண்டு அரசு உதவி பெறும் இன்ஜினியரிங் கல்லுாரிகள், பகுதி நேர இன்ஜினியரிங் பட்டப்படிப்புகளை வழங்கி வருகின்றன.
அதன் கால அளவு நான்கு ஆண்டுகள் ஆகும். இந்நிலையில், பகுதிநேர இன்ஜினியரிங் படிப்புக்கான கால அளவு, நடப்பு கல்வியாண்டு முதல், 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.
இதில் சேர விரும்பும் மாணவ - மாணவியர், www.ptbe-tnea.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
இதற்கு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் எனும், ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற, டிப்ளமா படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
துறை சார்ந்த பணியில், ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணிபுரியும் மாணவர்களுக்கு, வயது தடை கிடையாது.
இந்த படிப்பில், சேர, வரும் ஜூலை 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
